Lost Password

Member Login

Sign Up!

Please add some more characters

Please add some more characters

Please enter a proper e-mail

Passwords do not match!

Be the first one to publish news or messages related to Columbus, Ohio
குமரி மாவட்ட சமூக சேவகருக்கு ஆளுநர் ரோசய்யா பாராட்டு
குமரி மாவட்ட சமூக சேவகருக்கு ஆளுநர் ரோசய்யா பாராட்டு

தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனத் தலைவரான குமரி மாவட்டம் சின்னத்துறையைச் சேர்ந்த ஜஸ்டின் ஆண்டனியின் சமூக சேவையை தமிழக ஆளுநர் ரோசய்யா பாராட்டினார்.

தமிழக மீனவர்களுக்கு சர்வதேச அடையாள அட்டை வழங்க வேண்டும். மத்திய அரசில் மீனவர்களுக்குத் தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட வேண்டும். வெளிநாட்டுச் சிறைகளில் தவிக்கும் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வரும் இவர் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் உள்ளார்.

இவரது தலைமையில் இயங்கி வரும் தமிழ்நாடு மீனவர் வளர்ச்சிக் அறக்கட்டளைக்கு அண்மையில் ஐ.நா.சபை சர்வதேச அங்கீகாரம் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. குமரி மீனவர்கள் வங்கதேசப் படையினரால் சிறைப் பிடிக்கப்பட்ட போது நேரடியாக வங்கதேசத்துக்குச் சென்று சட்ட உதவிகளைச் செய்து வந்தார். இவரது சேவையைப் பாராட்டி குமரி மாவட்ட ஆட்சியர் மீனவர் சேவைக்கான குடியரசுத் தின விருது 2015 வழங்கி பாராட்டினார். இந்நிலையில் தமிழக ஆளுநர் ரோசய்யா இவரின் சமூக சேவையினை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

Publish Your News